ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம்ஸ் சார்பில் பி.எல். தேனப்பன் தயாரிக்க, ராம் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள படம் ‘பேரன்பு’.
இப்படத்தில் மூன்று முறை தேசிய விருது பெற்ற மம்முட்டி, அஞ்சலி, திருநங்கை அஞ்சலி அமீர், தேசிய விருது பெற்ற ‘தங்க மீன்கள்’ சாதனா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
‘பேரன்பு’ படம் நெதர்லாந்து நாட்டில் நடைபெற உள்ள ரோட்டர்டாம் 47வது சர்வதேசத் திரைப்பட விழாவிற்குத் தேர்வாகியுள்ளது.
படத்தின் முதல் பிரத்தியேகக் காட்சி வரும் 27ம் தேதி ரோட்டர்டாம் நகரின் பாதே திரையரங்கில் திரையிடப்பட உள்ளது.
அடுத்து இரண்டு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட பின் கோடை விடுமுறையில் ‘பேரன்பு’ படம் வெளியாக உள்ளது.