ஏமாலி, புது முயற்சி – வி.இசட். துரை

லதா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வி.இசட். துரை இயக்கத்தில் சாம்.டி.ராஜ் இசையமைப்பில் சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ், அதுல்யா, ரோஷினி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘ஏமாலி’.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. படத்தின் டிரைலரையும், இரண்டு பாடல்களையும் திரையிட்டார்கள். டிரைலரைப் பார்க்கும் போது  உளவியல் சார்ந்த படமாக இந்தப் படம் இருக்கும் எனத் தெரிகிறது.

படத்தின் நாயகன் சாம் ஜோன்ஸ், சமுத்திரக்கனி இருவரும் விதவிதமான தோற்றங்களில் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குனர் வி.இசட்.துரை கூறியதாவது,

“ஏமாலி படம் ஒரு புது முயற்சி. சிம்பிளான ஒரு டீமை வச்சி இந்தப் படத்தைப் பண்ணியிருக்கோம்.

சமுத்திரக்கனி இநத்ப் படத்துல ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்துல நடிச்சிருக்காரு. அவர் இதுவரைக்கும் நடிச்ச படத்துல இருந்து இந்தப் படத்துல மாறுபட்ட கதாபாத்திரத்துல நடிச்சிருக்காரு.

சாம் ஜோன்ஸ், முதல் படத்துலயே நான்கு விதமான தோற்றத்துல நடிச்சிருக்காரு. ரொம்ப ஈடுபாட்டோட நடிச்சிருக்காரு.

இன்னைக்கு இருக்கிற சூழ்நிலையில புது டீமை வச்சி பண்றது பெரிய விஷயம், அதை இந்தப் படத்தோட தயாரிப்பு நிறுவனம் லதா புரொடக்ஷன்ஸ் பண்ணியிருக்காங்க.

இந்தப் படத்துக்கு ஜெயமோகன் வசனம் எழுதியிருக்காரு. ரொம்ப பிரமாதமா எழுதியிருக்காரு. அவர்தான் என்னோட முந்தைய படமான ‘6 மெழுகுவர்த்திகள்’ படத்துக்கு வசனம் எழுதினாரு.

இந்தப் படத்துக்கு ‘ஏமாலி’ என பெயர் வச்சதுக்கு படத்துல ஒரு முக்கியக் காரணமிருக்கு. இந்தப் படத்துல பெண் புகை பிடிக்கும் காட்சி இருக்கு. அது வேணும்னே வச்சது இல்லை, கதாபாத்திரத் தன்மைக்காக அத வச்சோம். நிறைய பேர் கேக்கறாங்க, அடுத்த படத்துல அது மாதிரி வராம பார்த்துக்கறேன்.

Read Previous

இளையராஜாவுக்கு பத்ம விபூஷண், திரையுலகினர் வாழ்த்து

Read Next

இளையராஜா பற்றிய செய்தி, நடிகை கஸ்தூரி அதிரடி செயல்

Most Popular