இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இந்திய அரசு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான ‘பத்ம விபூஷண்’ விருது வழங்குவதாக அறிவித்துள்ளது.
இளையராஜாவுக்கு வாழ்த்து சொல்ல பலரும் அவரை சந்தித்து வருகிறார்கள். அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது குறித்து ஆங்கிலப் பத்திரிகை ஒன்று இளையராஜாவின் சாதியைக் குறிப்பிட்டு செய்தியை வெளியிட்டது.
இதற்குத் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். சமீப காலங்களில் தமிழக அரசியல் களத்தில் தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக வைக்கும் நடிகை கஸ்தூரி அந்த ஆங்கிலப் பத்திரிகையை காறித் துப்பி, அதைக் கிழித்து அவருடைய கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
“இளையராஜா இந்த நாட்டின் பொக்கிஷம், கடவுளுக்கு சாதி கிடையாது, இசைக்குத் தெரியும் எந்த சுவர்களும் இல்லை என்று” என கஸ்தூரி அது பற்றி குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/KasthuriShankar/status/956778091598168065
சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம்தான் இன்று மிகவும் பரபரப்பாக இருந்தது.