‘ஜிப்சி’ இந்தியா முழுவதும் படமாகும் கதை

‘குக்கூ, ஜோக்கர்’ ஆகிய வித்தியாசமான படங்களைக் கொடுத்த இயக்குனர் ராஜூமுருகன், அடுத்து ஜீவா நடிக்கும் ‘ஜிப்சி’ படத்தை இயக்க உள்ளார்.

ராஜூ முருகன் பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடிக்கவிருக்கும் ‘வர்மா’ படத்திற்கு வசனம் எழுதுகிறார்.

இயக்குனர் ராஜூமுருகன் ஜீவாவிடம் ஜிப்சி கதையைக் கூறியுள்ளார். வித்தியாசமான கதை என்பதால் ஜீவாவும் நடிப்பதற்கு உடனே சம்மதம் சொல்லியிருக்கிறார்.

இந்த படத்தை ‘தேசிங்கு ராஜா, மனம் கொத்திப் பறவை’ ஆகிய படங்களைத் தயாரித்த ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் சார்பில் S. அம்பேத்குமார் தயாரிக்கவுள்ளார்.

குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்கள் மூலம் சமூக வாழ்வியலை பிரதிபலிக்கும் படங்களைக் கொடுத்துள்ள ராஜு முருகன், தற்போது ‘ஜிப்சி’ படம் மூலம் ஜீவாவுடன் இணைந்து கமர்ஷியலான சமூக வாழ்வியல் படத்தை கொடுக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா முழுவதிலும் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது.

Read Previous

‘சவரக்கத்தி’-யின் சவால் – இயக்குனர் ஜி.ஆர். ஆதித்யா

Read Next

‘விஸ்வாசம்’ இசையமைப்பாளர் யார் ?

Most Popular