தமிழரான அருணாச்சலம் முருகானந்தம் பெண்களுக்கான குறைந்த விலை நாப்கினை தயாரித்து உலக அளவில் கவனம் ஈர்த்த ஒருவர். அவருடைய வாழ்க்கையை, போராட்டத்தை மையமாக வைத்து ஹிந்தியில் உருவான ‘பேட் மேன்’ என்ற ஹிந்திப் படம் பாராட்டைப் பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது.
அக்ஷய் குமார், ‘கபாலி’ நாயகி ராதிகா ஆப்தே, சோனம் கபூர் மற்றும் பலர் நடித்துள்ள அந்தப் படம் 50 கோடி வசூலைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
தமிழர் ஒருவரின் கதையை ஹிந்தியில் படமாக்கி சாதனை புரிந்துள்ளார்கள். அருணாச்சலம் முருகானந்தம் பற்றி தமிழில் ஏன் யாரும் படம் எடுக்கவில்லை என்ற கேள்வி ‘பேட் மேன்’ தயாரிப்பில் இருந்த போதே எழுந்தது.
இப்போது, ‘பேட் மேன்’ படத்தை தமிழில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்து வருகிறதாம். ஹிந்தியில் அக்ஷய் குமார் நடித்த கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
படம் பற்றிய ஆலோசனை நடந்து வருகிறது. விரைவில் இது பற்றி அறிவிப்பு வெளியாகலாம்.