பாலா இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ்குமார், இவானா மற்றும் பலர் நடித்துள்ள ‘நாச்சியார்’ படம் நாளை பிப்ரவரி 16 உலகம் முழுவதும் வெளியாகிறது.
பாலா இயக்கும் படம் என்றாலே தமிழ் சினிமா ரசிகர்கள் அந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். அவருடைய படத்தின் கதை, கதாபாத்திரங்கள், அதில் நடிகர்களின் நடிப்பு, இசை என சகல விஷயங்களும் ஒரு புது அனுபவத்தைக் கொடுக்கும்.
பாலா இயக்கத்தில் நடித்த நடிகர்கள் தற்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உயர்ந்திருக்கிறார்கள். அவர் படங்களில் நடித்த பிறகுதான் அவர்கள் மீது அதிக வெளிச்சமும் பட்டது.
முதல் முறையாக பாலா நாயகனுக்கு முக்கியத்துவம் இல்லாத, நாயகிக்கு முக்கியத்துவம் தரும் ஒரு படமாக ‘நாச்சியார்’ படத்தை உருவாக்கியிருக்கிறார்.
இப்படத்தின் டீசர் வெளியான போதே அதில் இடம் பெற்ற ஒரு கெட்ட வார்த்தை பரபரப்பாகப் பேசப்பட்டது.
இது ஒரு நாயகியின் படம்தான் என்றாலும் ‘ஹீரோயிசம்’ போல இப்படத்தில் ‘ஹீரோயினிசம்’ அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல், இதுவரை இப்படத்திற்காக எந்த பத்திரிகை சந்திப்பும் இல்லாமல் ‘நாச்சியார்’ படத்தை வெளியிடுகிறார் பாலா.
நான்கு பேரையாவது படம் பற்றி பேச வைத்து நல்ல லாபத்தைத் தயாரிப்பாளருக்கு இந்த படத்திலாவது வாங்கிக் கொடுப்பாரா பாலா ?.