சிம்பு-வை அழ வைத்த நண்பர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் சிங்கர் 6’ நிகழ்ச்சியில் இன்றைய சிறப்பு விருந்தினராக சிம்பு கலந்து கொண்டார்.

அவர் நிகழ்ச்சி அரங்கத்திற்கு வந்ததுமே ரசிகர்கள் அவரை பலத்த கரவொலியுடன் வரவேற்றனர். அதன் பின் நிகழ்ச்சியில் பாடிய போட்டியாளர்களின் திறமைகளைப் பார்த்து பாராட்டினார். அவர்களுடன் சேர்ந்து அவரும் பாடினார்.

இடையில் சிம்புவைப் பற்றி அவருடைய நெருங்கிய நண்பர்கள் சிலர் அவரைப் பற்றிப் பேசிய வீடியோவை ஒளிபரப்பினார்கள்.

அதில் நடிகை வரலட்சுமி, ஓவியா, நடன இயக்குனர் சாண்டி, நடிகர்கள் மகத், ஹரிஷ் கல்யாண், யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் சிம்புவைப் பற்றி அவர்களது கருத்துக்களைக் கூறினார்கள்.

அவர்களது பேச்சுக்களைக் கேட்க சிம்பு கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தார். தன்னைப் பற்றிப் பலரும் நெகட்டிவ்வான பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்கும் போது, தன்னைப் பற்றிப் பெருமையாகப் பேசிய நண்பர்களின் பேச்சைக் கேட்டு கண்ணீர் வந்தது என்று அழுது கொண்டே பேசினார் சிம்பு.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக, ‘நான் குண்டாகி விட்டேன் என்று என்னைப் பற்றி பலரும் பலவிதமாகப் பேசினார்கள். நான் எப்படி இருக்கிறேன் பாருங்கள்,’ என ரசிகர்களை நோக்கி கேட்டார். எனக்காக என் ரசிகர்கள் இருக்கிறார்கள், அவர்கள் அன்பு போதும்,’ என்றார்.

இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சி நாளையும் ஒளிபரப்பாகிறது.

Read Previous

‘சீமராஜா’ படப்பிடிப்பை முடித்த சமந்தா

Read Next

தமிழ்நாட்டில் பல தியேட்டர்கள் மூடப்பட்டன !

Most Popular