24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன் மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் ‘சீம ராஜா’.
இப்படத்தின் முதல் பார்வை கடந்த மாதம் சிவகார்த்திகேயன் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது. அன்றுதான் படத்தின் பெயரையும் அறிவித்தார்கள்.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்’ படங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயன், பொன்ராம் கூட்டணி சேர்ந்துள்ள படம் ‘சீமராஜா’.
சிவகார்த்திகேயன் ஜோடியாக முதல் முறையாக ஜோடி சேர்ந்து சமந்தா நடித்துள்ள படம் இது.
இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் தென்காசி, குற்றாலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்தது.
இன்றுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தனக்கு நிறைவடைந்துள்ளதாக படத்தின் நாயகி சமந்தா தெரிவித்துள்ளார்.
“சீமராஜா’ படப்பிடிப்பு எனக்கு முடிந்தது. இப்போது மார்ச் தான் நடக்கிறது, அதற்குள் எனக்கு இந்த வருடத்தில் பல விஷயங்கள் நடந்துள்ளது. மிகவும் சிறப்பான மகிழ்ச்சியான 2018. அற்புதமான படக்குழுவினருக்கு நன்றி,” என்று சமந்தா தெரிவித்துள்ளார்.
https://twitter.com/Samanthaprabhu2/status/972466420154904577