ரஜினிகாந்த் இமயமலை சென்றதன் காரணம் என்ன ?

ரஜினிகாந்தையும், இமயமலையையும் பிரித்துப் பார்க்க முடியாது. அடிக்கடி இமயமலைக்குச் செல்லும் வழக்கம் உடையவர் ரஜினிகாந்த்.

பொதுவாக ஒரு படம் முடிவடைந்ததும் சில நாட்கள் இமயமலை சென்று ஓய்வெடுத்துவிட்டு திரும்புவார். சில சமயங்களில் அது மாதக் கணக்கில் கூட இருந்ததுண்டு.

ரஜினிகாந்த்தின் இமயமலைப் புகைப்படங்கள் அவரை ஒரு ஸ்டார் ஆகக் காட்டாமல் ஒரு எளிய மனிதாராகவே காட்டியிருக்கிறது.

அரசியலில் இறங்க பல ஆலோசனைகளை நடத்தி வரும் ரஜினிகாந்த் திடீரென இமயமலை புறப்பட்டுச் சென்றது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. திடீரென அவர் எதற்காக இமயமலை செல்ல வேண்டும் என பலரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இரண்டு பெரிய படங்களின் படப்பிடிப்பை ரஜினிகாந்த் முடித்துக் கொடுத்துவிட்டார். இடையில் ஒரே ஒரு முறை மட்டும் அமெரிக்கா சென்று ஓய்வெடுத்து வந்தார். அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

அதோடு விரைவில் அரசியல் சுற்றுப் பயணத்தையும் தீவிரமாக ஆரம்பிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அது மட்டுமல்லாமல் திரையுலகத்தில் நடைபெறும் பிரச்சினையில் அவருடைய ‘காலா’ படத்தின் வெளியீடும் முக்கிய இடத்தில் உள்ளது. இதனால், பலரும் அவரைத் தொடர்பு கொண்டு பேசவும் வாய்ப்புகள் உள்ளன.

அவற்றைத் தவிர்ப்பதற்காகவும், அடுத்து திரைப் பயணத்திற்கும், அரசியல் பயணத்திற்கும் புத்துணர்ச்சியாக வேண்டும் என்பதற்காகவும் அவர் இமயமலை பயணம் மேற்கொண்டுள்ளார் என்கிறார்கள்.

அரசியலில் இறங்கிய பிறகும் ரஜினிகாந்த் இமயமலை பயணம் மேற்கொள்வாரா என்பது பலரது கேள்வியாக உள்ளது.

Read Previous

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ கதை என்ன ?

Read Next

‘சீமராஜா’ படப்பிடிப்பை முடித்த சமந்தா