திரையுலகப் பேச்சுவார்த்தை, எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம்

தமிழ்த் திரையுலகத்தில் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணம் வாங்குகிறார்கள் என தமிழ்த் திரையுலகத்தில் கடந்த 47 நாட்களாக புதிய படங்கள் வெளியீடு இல்லாமல் இருந்தது.

மார்ச் 16ம் தேதி முதல் திரைப்படம் சார்ந்த மற்ற பணிகளையும் நிறுத்தினார்கள். அதன் பின் திரையுலக சங்கங்கள் சந்தித்துப் பேசினாலும் முடிவு எட்டப்படவில்லை.

கடைசியில் தமிழக அரசு தலையிட்டு, தயாரிப்பாளர் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம், டிஜிட்டல் நிறுவனங்கள ஆகியவற்றுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அதன்படி சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

1. டிஜிட்டல் கட்டணங்கள் இ-சினிமா முறைக்கு 50 சதவீதம் குறைப்பு

2. படங்களுக்கேற்ப தியேட்டர் டிக்கெட் கட்டணம்

3. ஜுன் 1 முதல் கணினிமய டிக்கெட் விற்பனை

4. டிஜிட்டல் நிறுவனங்களுடனான தியேட்டர்கள் ஒப்பந்தம் ரத்துக்கு 6 மாத கால அவகாசம்

5. அம்மா தியேட்டர்களுக்குக் கோரிக்கை

நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவுகளுடன் அடிப்படையில் தயாரிப்பாளர் சங்கத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது. அதற்குப் பின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதி, படங்களை வெளியிடும் தேதி ஆகியவற்றைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்கள்.

Read Previous

‘சாஹோ’, வட இந்திய உரிமை 120 கோடி ?

Read Next

கலர்ஸ் டிவி – மாப்பிள்ளை ஆர்யா கொடுத்த அதிர்ச்சி

Most Popular