வட இந்தியாவில் முன்னணி டிவிக்களில் ஒன்றாக இருக்கும் கலர்ஸ் டிவி தமிழில் சில மாதங்களுக்கு முன்பு தடம் பதித்தது.
வந்த உடனேயே, ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற சுயம்வர நிகழ்ச்சி ஒன்றை ஆரம்பித்தது. நடிகர் ஆர்யா அவருக்குப் பொருத்தமான மணப்பெண்ணை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சியாக அது இருந்தது.
ஒரு பக்கம் கடும் எதிர்ப்புகளை அந்த நிகழ்ச்சி சம்பாதித்தாலும், எந்தத் தடையும் இல்லாமல் கடைசி வரை ஒளிபரப்பாகியது.
நிகழ்ச்சியில் வெளியேற்றப்படாமல் கடைசி வரை இருந்த சுஷானா, அகாதா, சீதாலட்சுமி ஆகிய மூவரில் யாரையாவது ஒருவரை ஆர்யா தேர்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
நேற்று ஒளிபரப்பான கடைசி எபிசோடில் அப்படி யாரையும் தேர்ந்தெடுக்காமல் மூவருக்குமே அதிர்ச்சியைக் கொடுத்தார் ஆர்யா.
மணக்கோலத்தில் மேடை ஏறிய மூன்று பெண்களுமே சோகத்துடன் வெளியேறினார்கள்.
“ஒருவரைத் தேர்ந்தெடுத்தால் மற்ற இருவரும், அவர்களது குடும்பத்தினரும் வருத்தப்படுவார்கள். இப்போது என்னால் யாரையும் தேர்வு செய்யது முடியாது. இது ஆரம்பமாக இருக்கட்டும். என்னால் பின்னர்தான் அது பற்றி சொல்ல முடியும்,” என ஆர்யா பேசி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
வந்திருந்த பார்வையாளர்களும், பெண்களின் பெற்றோர்களும் ஆர்யாவின் முடிவுல் அதிர்ச்சியடைந்ததில் ஆச்சரியமில்லை.
இந்த நிகழ்ச்சிக்கான அறிவிப்பிலேயே ‘அல்வா’ கொடுத்து அழைத்த ஆர்யா, நிகழ்ச்சியின் முடிவிலும் அனைவருக்கும் ‘அல்வா’ கொடுத்துவிட்டார் என்றுதான் சமூக வலைத்தளங்களில் கருத்து பரவி வருகிறது.
https://www.facebook.com/ColorsTvTamil/videos/1032663013525694/