எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபட்டி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் ஏப்ரல் 27ம் தேதி உலகெங்கும் வெளியாகி 1700 கோடி வசூலித்த படம் ‘பாகுபலி 2’.
அப்படத்தின் வெளியீ நாளை நினைவு கூறும் வகையில், நடிகர் பிரபாஸ் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
“எங்களின் ‘பாகுபலி 2’ படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் முடிவடைந்துள்ளது. இந்நாள் எனக்கு ஒரு சிறப்புமிகு நாள். இந்நேரத்தில் எனக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் எனது அன்பை காணிக்கையாக்குகிறேன். இந்த அழகான மற்றும் உணர்ச்சிபூர்வமான என் பயணத்தில் ஒரு பகுதியாக நீங்கள் இருந்ததற்கு நன்றி. இயக்குனர் S.S.ராஜமௌலி மற்றும் படக்குழுவினருக்கு எனது மரியாதைகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன்,” என்று பிரபாஸ் கூறியுள்ளார்.
‘பாகுபலி 2’ வரும் மே 4ம் தேதி சீனாவில் வெளியாக உள்ளது.
பிரபாஸ் தற்போது ‘சாஹோ’ படத்தில் நடித்து வருகிறார்.