‘காலா’ – இசை வெளியீடு மே 9ம் தேதி

பா. ரஞ்சித் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் ரஜினிகாந்த், நானா படேகர், ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘காலா’.

இப்படம் ஜுன் 7ம் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் கடந்த 20ம் தேதி அறிவித்திருந்தார்.

படத்தின் இசை வெளியீடு மே 9ம் தேதி வெளியிடப்படுவதாக சற்று முன் தனுஷ் அறிவித்துள்ளார்.

‘கபாலி’ படத்திற்குப் பிறகு பா.ரஞ்சித், சந்தோஷ் நாராயணன், ரஜினிகாந்த் இரண்டாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள படம்தான் ‘காலா’.

‘கபாலி’ படம் மலேசியாவில் உள்ள தாதா கதையாக உருவானது. ‘காலா’ படம் மும்பையில் உள்ள தாதா கதையாக உருவாகியுள்ளது.

Read Previous

‘பாகுபலி 2’-வின் ஒரு வருட நிறைவு, பிரபாஸ் நன்றி

Read Next

ஆன்ட்ரியா நாயகியாக நடிக்கும் ‘கா’