விமல், வடிவேலு இணைந்து நடிக்கும் முதல் படம்

‘மன்னர் வகையறா’ படத்திற்குப் பிறகு விமல் சில புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

எழில் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளார். ‘வெற்றிவேல்’ பட இயக்குனர் வசந்தமணி, ‘தமிழன்’ பட இயக்குனர் மஜீத், ‘மன்னர் வகையறா’ பட இயக்குனர் பூபதி பாண்டியன் ஆகியோரது படங்களில் நடிக்கப் போகிறார்.

அவற்றோடு சுராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் விமல் – வடிவேலு கூட்டணி முதல் முறையாக நடிக்க உள்ளது. போலீஸ் அதிகாரிகளாக இருவரும் நடிக்கி உள்ளார்கள்.

விமல், வரலட்சுமி ஜோடியாக நடித்து வரும் ‘கன்னிராசி’ படம் இறுதிக் கட்ட பணிகளில் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.

சற்குணம் இயக்கத்தில் ’களவாணி-2’ படத்தின் படப்பிடிப்பிலும் விமல் நடித்து வருகிறார். ஸ்டிரைக்கிற்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மே 3ஆம் தேதி முதல் மீண்டும் முழுவீச்சில் துவங்குகிறது.

Read Previous

‘நடிகையர் திலகம்‘ என் முதல் குழந்தை – கீர்த்தி சுரேஷ்

Read Next

‘பாகுபலி 2’-வின் ஒரு வருட நிறைவு, பிரபாஸ் நன்றி