தமிழ் ஸ்டன்ட் நடிகர்களுக்கு எதிர்ப்பு

     ந்திராவில் தமிழ் ஸ்டன்ட் நடிகர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘ஆந்திர பிரதேச ஸ்டன்ட் யூனியன்’ ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

நாகார்ஜுனா, நயன்தாரா நடிக்கும் புதிய படம் ஒன்றின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. அங்குள்ள 7 ஏக்கர் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் சண்டைக் காட்சி படம் பிடிக்கப்பட்டு வந்தது. அங்கு சென்ற ஆந்திர பிரதேச ஸ்டன்ட் யூனியனைச் சேர்ந்தவர்கள்,  தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்டன்ட் நடிகர்களை வைத்து படப்பிடிப்பு நடத்துவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்து படப்பிடிப்பை நிறுத்தினர்.

போலீஸ் குவிக்கப்பட்டு பின்னர் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது.

ஆந்திராவைச் சேர்ந்த சில ஸ்டன்ட் மாஸ்டர்கள் யூனியனில் பதிவு செய்து கொள்ளாமல் மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களை வைத்து படப்பிடிப்புகளை நடத்துவதே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

 

 

Read Previous

யாரையும் அடிக்கவில்லை – சார்மி

Read Next

‘அருந்ததி’ படத்திற்கு முன் நடிக்கத் தெரியாது – அனுஷ்கா

Most Popular