ஹரி இயக்கத்தில் விஷால் ஜோடியாக ‘தாமிரபரணி’ படத்தில் அறிமுகமானவர் பானு. ‘கருப்பான கையால….என்னை பிடிச்சான்’…என சரியான ஆட்டம் போட்டு அனைவரையும் கவர்ந்தவர், அதன் பின் காணாமல் போய் விட்டார்.
தற்போது மீண்டும், அசத்தலாக அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார். சமீபத்தில் அவருடைய அழகான புகைப்படங்களை ஊடகங்களுக்கு அனுப்பி அவரா இவர் என ஆச்சரியப்படும் அளவிற்கு திரையுலகினரையும் ஆச்சரியப்பட வைத்து விட்டார்.
இந்த வாரம் இவர் ஹீரோயினாக நடித்த ‘ புதுமுகங்கள் தேவை’ படம் வெளியாகிறது. விரைவில் வசந்த் இயக்கத்தில் நடித்துள்ள ‘மூன்று பேர் மூன்று காதல்’ திரைப்படம் வெளியாக இருக்கிறது.
2013ல் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இடம் பிடிக்க இப்போதே தயாராகி விட்டார்.