2012ம் ஆண்டில் வெளிவந்த படங்களில் அதிக படங்களுக்கு பாடல்கள் எழுதியிருக்கிறார் நா.முத்துக்குமார்.
இந்த ஆண்டில் வெளிவந்த நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் 34 படங்களில் 103 பாடல்களை அவர் எழுதியிருக்கிறார்.
ஒரு கல் ஒரு கண்ணாடி, வேட்டை, பில்லா 2, நீதானே என் பொன்வசந்தம், தோனி, தாண்டவம், விண்மீன்கள், மழைக்காலம், அம்புலி, மை ஆகிய படங்களின் முழுப்பாடல்களையும் எழுதியிருக்கிறார்.
இவற்றில் ஒரு கல் ஒரு கண்ணாடி, நீதானே என் பொன்வசந்தம், வேட்டை,பில்லா 2, படத்தின் அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட் வரிசையில் இடம் பெற்றவை.
தாண்டவம் படத்தில் இடம் பெற்ற ‘ஒரு பாதி கதவு நீயடி…’, நண்பன் படத்தில் இடம் பெற்ற, ‘ஹார்ட்டிலே பேட்டரி….’, மாற்றான் படத்தில் இடம் பெற்ற ‘ரெட்டைக் கதிரே…’, சுந்தர பாண்டியன் படத்தில் இடம் பெற்ற, ‘காதல் வந்து….’, மெரினாவில் இடம் பெற்ற ‘வணக்கம், வாழ வைக்கும்…’, அரவான் படத்தில் இடம் பெற்ற ‘நிலா நிலா போகுதே…’, போன்ற பல பாடல்களும் சூப்பர் ஹிட் வரிசையில் இடம் பெற்றன.
தற்போது, விஜய் நடிக்க விஜய் இயக்கும் படம், மூன்று பேர் மூன்று காதல், தங்க மீன்கள், ஆல் இன் ஆல் அழகு ராஜா, நாகராஜ சோழன் எம்.எல்ஏ., ஆகிய படங்களுக்கு முழுப்பாடல்களுடன் 83 படங்களுக்கு பாடல்களை எழுதி வருகிறார்.
தொடர்ந்து, முத்து முத்தான பாடல்களை எழுதுங்க, முத்து…