ஒரு படத்துக்கு ஈஸியா கதை கூட கிடைச்சிடும் போல இருக்கு. ஆனா, தலைப்பு கிடைக்கிறது அவ்வளவு ஈஸியான வேலையா இப்ப இல்லை .
ஏதாவது, பழைய படத்தோட தலைப்பை வச்சிடலாமா, இல்ல பழைய பாடல்களோட வரியை வச்சிடலாமான்னுதான் பலரும் யோசிச்சிட்டிருக்காங்க. இல்ல ஏதாவது சூப்பர் ஹிட்டான கேரக்டர் பேரை வச்சிடலாமான்னுதான் பார்க்கறாங்க. இதுக்கு நிறையவே உதாரணம் சொல்லலாம்.
ஒரு படத்துக்கு தலைப்புதான் ரசிகர்களை தியேட்டருக்கு உள்ள கொண்டு வர்ற ஒரு விஷயமா இருக்கு. அந்த தலைப்புலயே ஒரு ஈர்ப்பு இருக்கணும்னுதான் எல்லா ஹீரோக்களும் விரும்புறாங்க.
இலக்கியத் தரமான தலைப்புலாம் எவ்வளவோ இருக்கு, ஆனால் அதை மாதிரி வச்சால் இன்னைக்கு இருக்கிற யூத்தையெல்லாம் கவர் பண்ண முடியாமான்னு யோசிக்கிறாங்க.
அப்படியும் ஒரு சிலர் அழகான தலைப்பை வச்சிடறாங்க. அப்படி ஒரு தலைப்பைத்தான் இயக்குனர் அமீர் வச்சிருக்காரு. ‘ஆதி பகவன்’ கற தலைப்பை இன்னைக்கு ஸ்கூலுக்கு போற பசங்க கூட கண்டிப்பா தெரிஞ்சி வச்சிருப்பாங்க. இப்படி பல தலைப்பு தேடிப் பார்த்தால் கண்டிப்பா கிடைக்கும்.
கமல் நடிச்சி பொங்கலுக்கு வர்றப் போற ‘விஸ்வரூபம்’ பேர்ல கூட ஏற்கெனவே ஒரு படம் வந்திருக்கு. சிவாஜிகணேசன், ஸ்ரீதேவி, சுஜாதா, நடிச்சி ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்துல எம்.எஸ். விஸ்வநாதன் இயக்கத்துல 1980ம் ஆண்டு வெளிவந்த ஒரு படம் ‘விஸ்வரூபம்’.
பொங்கலுக்கு வர்ற இன்னொரு படமான ‘அலெக்ஸ் பாண்டியன்’ தலைப்பு, ‘மூன்று முகம்’ படத்துல ரஜினிகாந்த் நடிச்ச பவர் ஃபுல் இன்ஸ்பெக்டர் கேரக்டர் ‘அலெக்ஸ் பாண்டியன்’.
பொங்கலுக்கு வர்ற இன்னொரு படமான ‘சமர்’ படத்தோட முந்தைய டைட்டில் ‘சமரன்’. வேற யாரோ இந்த பேரை பதிவு பண்ணி வச்சிருக்காங்கன்னு அப்புறமா ‘சமர்’னு மாத்திட்டாங்க.
சந்தானம், பவர் ஸ்டார் நடிச்சி வரப் போற ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ ஒரு விளம்பரத்துல சொல்லப்படற ஹிட்டான வாசகம்.
சரி, இதோட இருந்தால் பரவாயில்லை, இப்ப ‘தல, தளபதி’ ரசிகர்களுக்கு அவங்க ஃபேவரிட் ஹீரோக்கள் நடிக்கிற படத்தோட தலைப்பு என்னன்னு தெரிஞ்சிக்க அவ்வளவு ஆர்வமா இருக்காங்க.
அஜித், விஷ்ணுவர்தன் இயக்கத்துல நடிச்சிட்டிருக்கிற படத்துக்கும், விஜய், விஜய் இயக்கத்துல நடிச்சிட்டிருக்கிற படத்துக்கும் இதுவரைக்கும் தலைப்பே வைக்கலை.
கதைக்குப் பொருத்தமான தலைப்பு கிடைக்காததுதான் இதுக்குக் காரணம்னு கோடம்பாக்கத்துல பேசிக்கிறாங்க.
ஆனால், அஜித் படத்துக்கு தலைப்பு முடிவு பண்ணிட்டாங்க, தமிழ் சினிமாவுல முதல் முறையா, புதுமையா, ஒரு பிரம்மாண்டமான ஃபங்ஷன் நடத்தி தலைப்பை அறிவிக்கப் போறங்கன்னும் பேசிக்கிறாங்க.
விஜய் படத்தோட தலைப்பு ‘தங்க மகன்’ னு இருக்கலாம்னு சொன்னாங்க, ஆனால் விஜய் சூப்பர் ஸ்டாரோட எந்த படத்தோட தலைப்பும் வேணாம்னு சொன்னதாகவும் தகவல்.
எது எப்படியோ, தலைப்பை வச்சி நாங்களும் ஒரு ஸ்டோரி எழுதிடுவோம், ரசிகர்களும் தலைப்பைப் பத்தி பேசிக்கிட்டும் இருப்பாங்க.
நல்ல பேரு வச்சாலும் ‘பப்ளிசிட்டி’தான், பேரை வைக்கலன்னாலும் கூட ‘பப்ளிசிட்டி’தான்.