டிரிபிள் வி ரிகார்ட்ஸ் வ. வினோத்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ராஜபாண்டி இயக்கத்தில், பிரேம்ஜி அமரன் இசையில், விஜய் வசந்த் ஹீரோவாக நடிக்க உருவாகி வரும் போகும் படம் ‘என்னமோ நடக்குது’.
எங்கேயோ , ஏதோ , என்னமோ நடந்து கொண்டுதான் இருக்கிறது . சிலவற்றை நாம் பார்க்கிறோம் , சிலதை நாம் அறிகிறோம் ..இவற்றில் நம் கற்பனைக்கும் ,சிந்தனைக்கும் ,அப்பாற்பட்ட சம்பவங்களின் தொகுப்புதான் ”என்னமோ நடக்குது ”.
ஒரு சராசரி இளைஞனின் வாழ்வில் வரும் காதலும் அதன் தொடர்ச்சியாக சமுதாயத்தின் இரு பெரும் தூண்களுக்கிடையே அவன் சிக்கி போராடி வெற்றி பெறுவதும்தான் ‘என்னமோ நடக்குது’ படத்தின் கதை.
விளம்பர உலகில் பிரசித்தி பெற்ற இயக்குனர் ராஜ பாண்டி இப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமாகிறார்.
“வளரும் நடிகைகள் புதிய இயக்குனர்களை தவிர்ப்பது புதிராக இருக்கிறது . கதையைக் கேட்கக் கூட தயங்குகிறார்கள் . என் படத்திற்கு கதையைப் புரிந்து கொண்டு நடிக்க ஒரு புத்திசாலிப் பெண் தேவை ! தேடிக் கொண்டிருக்கிறோம் , விரைவில் அறிவிப்போம் என்கிறார் இயக்குனர் ராஜபாண்டி.
படப்பிடிப்பு ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ‘ என்னமோ நடக்குது ‘ ஒரு குறுகிய கால தயாரிப்பு ஆகும்.