இன்றைய ரிலீஸ்…

ன்று 2012ம் வருடத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான டிசம்பர் 28 வெளியாகும் படங்கள்…

புதுமுகங்கள் தேவை

வின்னர் புல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் மனீஷ் பாபு இயக்கியிருக்கும் படம். இசை – ட்வின்ஸ் டியூன்ஸ். சிவாஜி தேவ், ராஜேஷ் யாதவ், பானு, விஷ்ணுப்ரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

கோழி கூவுது

விவி பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கே.ஐ. ரஞ்சித் இயக்கியிருக்கும் படம். இசை – இ.எஸ். ராமராஜ். அசோக், சிஜா ரோஸ், ‘ஆடுகளம்’ நரேன், ரோகிணி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

பாரசீக மன்னன்

ரிச் ஆர்ட் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில்,  ஜே. சுரேஷ் இயக்கி, இசையமைத்து, நாயகனாக நடிக்கும் படம். ஸ்ருதி லட்சுமி, ரமேஷ் கண்ணா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

அகிலன்

ஸ்பாட்லைட் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ஹென்றி ஜோசப் இயக்யிருக்கும் படம்.  இசை – கணேஷ் ராகவேந்திரா. டாக்டர் பி. சரவணன், வித்யா, கஞ்சா கருப்பு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

கண்டுபுடுச்சிட்டேன்

டாப் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆர். கோபால் ராஜ் இயக்கியிருக்கும் படம்.

இன்று ஏறக்குறைய 10 படங்கள் வெளிவருவதாக இருந்தது. அவற்றில் 5 படங்கள் மட்டுமே இன்று வெளியாகின்றது. மற்ற படங்கள் அடுத்த வாரம் வெளியாகும் எனத் தெரிகிறது.

Read Previous

‘புத்திசாலிப் பெண்’ வேண்டும்…

Read Next

கார்த்தி ஜோடியாக மீண்டும் காஜல் அகர்வால்