சாக்ஷி, 90களின் இறுதியில் தமிழ், தெலுங்கு என பரபரப்பாக பேசப்பட்டி நடிகை.
தமிழில், அரவிந்த்சாமியுடன் ‘புதையல்’, பிரபுவுடன், ‘மாப்பிள்ளை கவுண்டர்’, அர்ஜுனுடன் ‘வேதம்’, சரத்குமாருடன் ‘மானஸ்தன்’ ஆகிய படங்களில் நடித்தவர்.
தெலுங்கில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, நாகார்ஜுனா போன்றோருடன் நடித்திருக்கிறார்.
இப்போது, ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஆதி பகவன்’ படத்தில் ‘ஐசலாமே….’ என்ற பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்.
நீண்டகாலமாக சினிமாவை விட்டு ஒதுங்கி அமெரிக்காவில் செட்டில் ஆகியிருந்தவர் இயக்குனர் அமீரின் வேண்டுகோளை ஏற்று இந்த பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்.
இந்த பாடலுக்காக இரண்டு கோடிரூபாய் செலவில் பிரம்மாண்ட செட்டும், ஐம்பதுக்கும் மேற்பட்ட ரஷ்ய நாட்டு நடனக்கலைஞர்களும் ஆட அட்டகாசமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.
ம்ம்…சத்தமில்லாம வந்தாலும் ‘சாக்ஷி’ சக்சஸா ரீ என்ட்ரி தர்றாங்க…