‘கடல்’ கௌதமின் அடுத்த படம்…

  gowtham‘கடல்’ நாயகி துளசி பற்றி ஒரு செய்தி போட்டு விட்டு நாயகனைப் பற்றிய செய்தி சொல்லாமலிருந்தால் எப்படி.

மணிரத்னம் இயக்கி வரும் ‘கடல்’ படத்தில் நாயகனாக நடித்து வருபவர் நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம்.

அப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னரே பல இயக்குனர்களின் பார்வையில் விழுந்து விட்டார். பல முன்னணி இயக்குனர்கள் அவரை இயக்கத் தயாராக உள்ளதாக சொல்லப்படுகிறது.

அடிக்கடி ஏதாவது ஒரு புது செய்தி கௌதமைப் பற்றி வந்து கொண்டுதானிருக்கிறது.

அப்படி இன்று வெளியாகியுள்ள ஒரு செய்தி,‘மைனா’, ‘கும்கி’ வெற்றிப் படங்களின் இயக்குனர் பிரபு சாலமன்  கௌதமின் அடுத்த படத்தை இயக்கப் போகிறார் என்பதுதான்.

முறையான அறிவிப்பு வரும் வரை இதைப் பற்றி உறுதியாக சொல்ல முடியாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Read Previous

பரபரப்பான படப்பிடிப்பில் ‘யான்’

Read Next

உதயநிதி – நயன்தாரா நடிக்கும் ‘கதிர்வேலின் காதலி’

Most Popular