‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் – நடிக்கும் படத்தை ‘சுந்தரபாண்டியன்’ படத்தின் இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன் இயக்குவது அனைவருக்கும் தெரிந்ததே.
இப்போது இந்த படத்துக்கு ‘கதிர்வேலின் காதலி’ என பெயரிட்டிருக்கிறார்கள். ‘கதிர்வேலின் காதலி’யாக நயன்தாரா நடிக்கிறார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார், பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.
சந்தானம் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க, மேலும் ‘பரோட்டா’ சூரியும் நடிக்கவிருக்கிறார் எனத் தெரிகிறது.
இம்மாத கடைசியில் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது.