ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில், கல்யாணகிருஷ்ணன் இயக்கத்தில், ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பில், ஜெயம் ரவி, த்ரிஷா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிக்க தயாராகி வரும் படம் ‘பூலோகம்’.
வட சென்னை பகுதிகளில் பிரசித்தி பெற்ற குத்து சண்டை வீரனான ‘ பூலோகம்’ (ஜெயம் ரவி) தேசிய அளவிலும் உலக அளவிலும் தானாகவும் , தன்னைச் சுற்றி பின்னப்பட்ட சூழ்நிலையாலும் எப்படி பிரபலம் ஆகிறார் என்பதுதான் ‘பூலோகம்’ படத்தின் கதை.
“இந்த படத்தின் வாயிலாக நாங்கள் தெரியப்படுத்துவதும், தெளிவுபடுத்துவதும், ஒரு முக்கியமான, யதார்த்தமான, அதிர்சிகரமான உண்மை. அந்த நோக்கத்தை விட்டு நாங்களும் சரி கதையும் சரி விலகவேயில்லை,” என்கிறார் இயக்குனர் கல்யாணகிருஷ்ணன்.
இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் இப்படத்திற்கு வசனம் எழுதுகிறார்.
‘பையா’ படத்தில் நடித்த அர்பித் ரங்கா, பொன்வண்ணன், ஷண்முகராஜன், அமெரிக்க நடிகர் நேதன் ஜோன்ஸ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.