அனுஷ்கா, இப்போது தமிழ், தெங்கில் ‘மோஸ்ட் வான்டட்’ ஹீரோயினாகி விட்டார்.
தமிழில் இவர் நடித்த ‘அலெக்ஸ் பாண்டியன்’ இன்னும் சில நாட்களில் வெளியாகி இருக்கிறது. சூர்யாவுடன் நடிக்கும் ‘சிங்கம் 2’ படப்பிடிப்பும் முடிந்து விட்டது. செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா ஜோடியாக ‘இரண்டாம் உலகம்’ படத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் குணசேகர் இயக்கத்தில் ‘ராணி ருத்ரமாதேவி’என்ற சரித்திரப் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதற்காக பல பயிற்சிகளை எடுத்துக் கொண்டு வருகிறார் .
தற்போது, ‘நான் ஈ’ படத்தின் இயக்குனர் ராஜமௌலி அடுத்து பிரபாஸை நாயகனாக வைத்து இயக்கப் போகும் ஒரு சரித்திரப்படத்தில் அனுஷ்கா நாயகியாக நடிக்க இருக்கிறார்.
இப்படம் தமிழிலும் வெளியாக வாய்ப்பிருக்கிறது.