அண்ணன் படத்தில் மீண்டும் பாடிய தனுஷ்

     irandam ulagamசெல்வராகவன் தற்போது இயக்கி வரும் படம் ‘இரண்டாம் உலகம்’. ஆர்யா, அனுஷ்கா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்திற்காக தனுஷ் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.  அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் பாடும் நான்காவது படமிது. ஏற்கெனவே, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன ஆகிய படங்களில் தனுஷ் பாடியிருக்கிறார்.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் குறிப்பிட்ட அந்த பாடலை தனுஷ் பாடினால் நன்றாக இருக்கும் நினைத்திருக்கிறார். பிஸியான மற்ற படங்களின் வேலைக்கு நடுவில் தனுஷ் அந்த பாடலை பாடி கொடுத்திருக்கிறார்.

இந்த பாடல் படமாக்கப்பட்டதும் ‘இரண்டாம் உலகம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைகிறது. இறுதிக் கட்ட பணிகள் முடிந்ததும் படம் திரைக்கு வர உள்ளது.

Read Previous

மீண்டும் ஒரு சரித்திரப்படத்தில் அனுஷ்கா

Read Next

அந்தமானில் ‘எதிர் நீச்சல்’