‘விஸ்வரூபம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முன்னதாகவே ஒரு சில டிடிஎச்-களில் வெளியிடப்பட உள்ளது.
படத்தின் வெளியீடான 11ம் தேதிக்கு முன்னதாக 10ம் தேதி இரவே டிடிஎச்-ல் வெளியிட திட்டமிடப்பட்டு, அதற்கான முன்பதிவுகளையும் அந்தந்த நிறுவனங்கள் செய்து வந்தன.
இதனால் , கோபமுற்ற தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், ‘விஸ்வரூபம்’ படத்திற்கு தமிழகம் முழுவதும் திரையரங்குகளை தரமாட்டோம் என தெரிவித்திருந்தன.
இந்த சூழ்நிலையில் நேற்று இரவு திடீரென ‘விஸ்வரூபம்’ குழுவினருக்கும், தமிழ் நாடு திரையரங்க உரிமையாளர்களும் சந்தித்து பேசினார்கள். இந்த பேச்சு வார்த்தை இன்று காலையும் தொடரும் எனத் தெரிகிறது.
இதன் பின், இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
அது , எம்மாதிரியான முடிவு என்பது பேச்சு வார்த்தைக்குப் பிறகே தெரிய வரும். அநேகமாக இன்று மாலைக்குள் பிரச்சனை தீர்க்கப்பட்டு விடும் என கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.