விஷால் நடித்த ‘சமர்’ பொங்கலுக்கு வருவதில் சிக்கல்

     samarவிஷால், த்ரிஷா, சுனைனா நடித்த ‘சமர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளி வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

‘சமர்’ திரைப்படத்தை தயாரித்த பாலாஜி ரியல் மீடியா பிரைவேட் லிட்., நிறுவனத்தின் மீது படப்பிடிப்புக் கருவிகளை வாடகைக்கு விடும் ஆனந்த் சினி சர்வீஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதே இதற்குக் காரணம்.

பாலாஜி ரியல் மீடியா நிறுவனம் இதற்கு முன் தயாரித்த ‘ஒஸ்தி’ திரைப்படத்திற்கு ஆனந்த் சினி வர்வீஸ் நிறுவனத்திற்கு படப்பிடிப்புக் கருவிகளை வாடகைக்கு எடுத்ததில் 62 லட்ச ரூபாய் பாக்கி வைத்துள்ளது.

இப்போது ‘சமர் ’ திரைப்படத்திற்கு பயன்படுத்தியிதில் 58,45,500  ரூபாய் பாக்கி வைத்துள்ளது.

எனவே, மொத்தமாக ரூபாய் 1.20 கோடி தராமல், படத்தை வெளியிடக் கூடாது என ஆனந்த் சினி சர்வீஸ் ‘சமர்’ படத்திற்கு தடை விதிக்க வேண்டுமென வழக்கு தொடுத்துள்ளது.

ஆனால், பாலாஜி ரியல் மீடியா நிறுவனம் பாக்கித் தொகையை செலுத்தத் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 22ம் தேதி வரை நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.

இன்னும், ஒரு சில நாட்களில் இரு நிறுவனங்களுக்கும் இடையில் சுமூகமான நிலை ஏற்பட்டால் மட்டுமே படம் பொங்கலுக்கு வெளிவரும்.

Read Previous

விஸ்வரூபம் டிடிஎச்-ல் வருமா ?

Read Next

‘இசை’ படத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கவில்லை