‘கடல்’ படத்தில் முத்தக் காட்சியா…?

kadalமிழ் சினிமாவில் ‘கமல்ஹாசன்’ ஏற்படுத்தி வைத்த முத்தக் காட்சிகள் இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

80களில் முத்தக் காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் கமல்ஹாசன். கதைக்கு தேவைப்பட்டதால் வைத்தோம் என்று சொல்லியே பல படங்களில் அப்படிப்பட்ட காட்சிகளை வைத்தவர். ஆனாலும், அப்போதெல்லாம் இதைப் பற்றி பேசக் கூடத் தயங்கியவர்கள் உண்டு.

இப்போதெல்லாம் அப்படியில்லை. புதுமுக நடிக, நடிகையர் கூட முத்தக் காட்சிகளில் தயக்கமில்லாமல் நடிக்கிறார்கள்.

கடல் படத்தில் முத்தக் காட்சி ஒன்றும் இருக்கிறதாம். நாயகன் கௌதம், நாயகி துளசியை முத்தமிடும் காட்சி ஒன்று படமாக்கப்பட்ட போது, முக்கியமானவர்களைத் தவிர மற்றவரை வெளியே அனுப்பி விட்டு காட்சி படமாக்கப்பட்டதாம். புதுமுகங்கள் இருவருமே தயக்கமில்லாமல் நடித்ததாக கோடம்பாக்கத்தினர் பேசிக் கொள்கிறார்கள்.

Read Previous

‘அமைதிப்படை – 2 ’ படப்பிடிப்பு முடிவடைந்தது…

Read Next

‘அரசாங்கத்தை மாற்றும் சக்தி கொண்டவர் சூப்பர்ஸ்டார்’ – தெலுங்கு இயக்குனர் பரபரப்பு பேச்சு

Most Popular