‘அரசாங்கத்தை மாற்றும் சக்தி கொண்டவர் சூப்பர்ஸ்டார்’ – தெலுங்கு இயக்குனர் பரபரப்பு பேச்சு

rajinikanthமிழ் இயக்குனர்களுக்கு மட்டுமல்ல, தென்னிந்தியாவில் உள்ள அநேக இயக்குனர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது ஒரு லட்சியமாகவே இருக்கும்.

ஒவ்வொரு முறை அவர் புதிய படத்தில் நடிக்கப் போகும் தகவல் வரும் போது அவர் படத்தை இயக்கப் போகிறார்கள் என பல இயக்குனர்களின் பெயர் செய்திகளில் அடிபடும். சில செய்திகளை இயக்குனர்களே பரப்பி விடுவதும் உண்டு.

ஆனால், இந்த தெலுங்கு இயக்குனரின் ஆசை அவர் உள்ளத்தில் இருந்து வரும் உண்மையான வார்த்தைகள்.

அவர் பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா. இவர் வழக்கமான மசாலா இயக்குனர் அல்ல. தான் இயக்கிய முதல் படமான ‘டாலர் ட்ரீம்ஸ்’ படத்துக்காக சிறந்த புதுமுக இயக்குனருக்கான தேசிய விருதைப் பெற்றவர். தொடர்ந்து, ஆனந்த், கோதாவரி, ஹேப்பி டேஸ், லீடர், லைப் இஸ் பியூட்டிஃபுல், போன்ற தெலுங்குப் படங்களை இயக்கியவர்.

Shekar-Kammulaசமீபத்தில் ரஜினி பற்றிய ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் அவர் பேசிய போது ரஜினி படம் இயக்க வேண்டும் என்ற ஆவலை வெளியிட்டார்.

“ரஜினிகாந்த் அவர்களைப் போல் ஒரு மிகப் பெரிய நட்சத்திர அஸ்தஸ்திற்கு உயர்ந்தவர்கள் யாரும் இல்லை. அவர் ஒரு மாமனிதர்.

‘லீடர் படத்தை தெலுங்கில் இயக்கிய பின் அவரை பார்க்க வேண்டும் என்று எவ்வளவோ முயன்றேன், ஆனால் முடியவில்லை. இப்படத்தை தமிழில் சூப்பர்ஸ்டாரை வைத்து இயக்க வேண்டும் என்பது என் ஆசை. ஏனென்றால், அரசாங்கத்தை மாற்றக் கூடிய சக்தி அவரிடம் உண்டு என்று நான் நம்புகிறேன்,” என்றார்.

அரசியல் பின்னணி கொண்ட கதைதான் ‘லீடர்’.  2010ல் தெலுங்கில் வெளியானது. ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் தயாரித்த படம்.

பார்ப்போம், சேகர் கம்முலாவின் குரல் சூப்பர் ஸ்டாருக்கு எட்டுமா என்று ?

சேகர் கம்முலா தற்போது ‘கஹானி’ படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கை இயக்கி வருகிறார்.

 

Read Previous

‘கடல்’ படத்தில் முத்தக் காட்சியா…?

Read Next

சோனா இயக்குனராகும் ‘தேவ்’

Most Popular