பிரபல கிளாமர் நடிகை சோனா இயக்குனர் ஆகிறார்.
அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம் படத்தில் அறிமுகமானவர் சோனா. அதன் பிறகு தெலுங்கில் பிரபலமாக 25 படங்களுக்கும் மேல் நடித்தார்.
பின்னர் மிண்டும் தமிழுக்கு வந்து, மிருகம், குசேலன் படங்கள் மூலம் பிஸியானார். மலையாளத்திலும் பல படங்களில் நடித்தார். ‘கோ’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து பரபரப்பாக பேசப்பட்டார்.
நடித்துக் கொண்டே ஆடை ஆபரணங்கள் விற்கும் கடையையும் நடத்தி வருகிறார்.
‘கனிமொழி’ என்ற திரைப்படத்தையும் தயாரித்தார்.
இப்போது, இயக்குனராக அவதாரம் எடுக்க இருக்கிறார். இதற்காக பயிற்சியையும் பெற்றார். அவர் இயக்க உள்ள படத்திற்கு ‘தேவ்’ என பெரியடப்பட்டுள்ளது.
மற்ற நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
ஒருவனின் வாழ்க்கையில் ‘லவ்’ என்கின்ற யதார்த்தமான உணர்வின் ஆழம்தான் ‘தேவ்’ என்கிறார் சோனா.
பிப்ரவரி முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.