2003ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ‘பாய்ஸ்’ படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமானார் சித்தார்த்.
அதன் பின், மணிரத்னம் இயக்கிய ‘ஆய்த எழுத்து’ படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்தார்.
பின்னர், தெலுங்குக்கு சென்று அங்கு பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி ஹீரோக்களில் ஒருவராக ஆனார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் தமிழில் நடித்த ‘காதலில் சொதப்புவது எப்படி’ சென்ற ஆண்டின் வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது.
தற்போது தமிழில் அதிகமான படங்களில் நடித்து வரும் இளம் நாயகர் சித்தார்த் மட்டுமே.
சுந்தர் .சி இயக்கத்தில் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, நந்தினி ரெட்டி இயக்கத்தில் ‘டும் டும் பீ பீ’, மணிமாறன் இயக்கத்தில் ‘உதயம்’, வசந்தபாலன் இயக்கத்தில் ‘காவியத் தலைவன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.