‘லட்டு’ பிறந்தநாள் கொண்டாடும் சந்தானம்

santhanamந்தானம் இன்று தன்னுடைய  33வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

ஊட்டியில் நடக்கும் ‘தலைவன்’ படப்பிடிப்பில் ‘லட்டு’ வெட்டி இன்று தன்னுடைய பிறந்த நாளை படப்பிடிப்புக் குழுவினருடன் கொண்டாடினார். அனைவரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்த வருட பிறந்த நாள் சந்தானத்திற்கு சிறப்பு வாய்ந்த ஒன்று. எத்தனையோ படங்களில் நாயகனின் நண்பனாக நடித்து அவர்களுடைய காதலுக்கு உதவியாக இருந்தவர், ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் அவரே நாயகனாகவும் நடித்து பிரம்மாண்டமான வெற்றியையும் பெற்றிருக்கிறார்.

அது மட்டுமல்ல, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார்.

தொடர்ந்து பல படங்களிலும் நடித்து வருகிறார். இன்றைய இளைஞர்கள் ரசிக்கும் நகைச்சுவை நடிகராக இருந்து வருகிறார்.

அவருக்கு நம் வாழ்த்துகள்…

Read Previous

மீண்டும் தமிழில் பிஸியான சித்தார்த்…

Read Next

பாரீஸ் பட விழாவில் ‘வழக்கு எண் 18/9’ சிறந்த திரைப்படமாக தேர்வு

Most Popular