மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ், சீமான் மற்றும் பலர் நடிக்கும் ‘அமைதிப்படை -2 – நாகராஜ சோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ., ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.
மணிவண்ணன் – சத்யராஜ் கூட்டணியில் 1994ல் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘அமைதிப்படை’ படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் தயாராகி வருகிறது.
மணிவண்ணன், ரகு மணிவண்ணன், கேரளா புது வரவு மிருதுளா, கோமல் ஷர்மா, வர்ஷா ஆகியோர் நடிக்க ஜேம்ஸ் வசந்தன் இசையில் மிகப்பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது இந்த படம்.
இன்றைய அரசியல் சூழ்நிலைக்கேற்பவும் படத்தில் பரபரப்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.