2013ம் ஆண்டு யாருக்கு அமர்க்களமாக ஆரம்பமாகியதோ இல்லையோ, ஹன்சிகாவிற்கு அமர்க்களமாக ஆரம்பமாகியுள்ளது.
ஆண்டின் துவக்கத்திலேயே அதிக படங்களில் நடித்து வரும் நடிகை என்ற பெயரை பெற்று விட்டார் அனுஷ்கா.
ஆர்யாவுடன் ‘சேட்டை’, சூர்யாவுடன் ‘சிங்கம் 2’, கார்த்தியுடன் ‘பிரியாணி’, சிம்புவுடன் ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’ சித்தார்த்துடன் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ , ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
‘பிரியாணி’ படத்தின் ஸ்டில்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பை அவரை அதிகமாகவே மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறது. இவர் நடித்துக் கொண்டிருக்கும் படங்களைப் பார்த்தால் இந்த ஆண்டில் தமிழில் இவர்தான் நம்பர் 1 இடத்தைப் பிடிப்பார் போலிருக்கிறது.