பாலாவின் ‘பரதேசி’ அடுத்த வாரம் ரிலீஸ்…

paradesiபாலா இயக்கியிருக்கும் ‘பரதேசி’ திரைப்படம் அடுத்த வாரம், பிப்ரவரி 15ம் தேதியன்று வெளியாகிறது.

அதர்வா, தன்ஷிகா, வேதிகா, மற்றும் பலர் நடித்திருக்கும் ‘பரதேசி’ திரைப்படம் சுதந்திரத்திற்கு முந்தைய கால கட்டத்தில் டீ எஸ்டேட்டுகளில் நடந்த அடிமைத்தன வாழ்க்கை முறை பற்றிய கதையாகும்.

இதுவரை பாலா இயக்கிய படங்களிலேயே இந்த படம்தான் சிறந்த படமாக இருக்கும் என திரையுலகினரால் பேசப்பட்டு வருகிறது.

முதலில் டிசம்பர் மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு, பின்னர் பொங்கலுக்கு வெளியாகலாம் என வந்து தற்போது பிப்ரவரி 15ம் தேதியன்று வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் இன்னும் ஒரு சில பெரிய படங்களும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

நாளை ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ இசை வெளியீடு

Read Next

25வது நாளில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’

Most Popular