25வது நாளில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’

klta-25வியாபார ரீதியாக இந்த ஆண்டின் முதல் வெற்றிப் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’.

மற்ற படங்கள் எல்லாம் ‘அல்வா’ கொடுத்து விட இந்த படம் மட்டுமே வாங்கிய அனைவருக்கும் ‘லட்டு’ கொடுத்து லாபத்தை சுவைக்க வைத்துள்ளதாக சாதாரண ரசிகரும் பேசும் அளவிற்கு இந்த படம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து விட்டது.

ரொம்பவும் மெனக்கெடாமல், ஒரு பெண்ணை மூன்று பேர் காதலிக்கப் போட்டி போடுகிறார்கள் என்பதை மையக் கருவாக வைத்து , நகைச்சுவையை மட்டுமே பிரதானமாக வைத்து வெற்றியைப் பெற்று விட்டார்கள் என   குறை சொல்பவர்களும் உண்டு.

ஆனாலும், ரசிகர்களை சிரிக்க வைக்கும் ‘மந்திரம்’, ரசிக்க வைக்கும் ‘தந்திரம்’ இந்த ‘லட்டில்’ இருந்ததால் ரசிகர்களை ஆசையுடன் ‘தின்னு’ வெற்றியைத் தந்தார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

Read Previous

பாலாவின் ‘பரதேசி’ அடுத்த வாரம் ரிலீஸ்…

Read Next

வழக்கு எதிரொலி – கே.பி.கி.ர., இசை வெளியீடு ரத்து

Most Popular