நாளை ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ இசை வெளியீடு

kbkr‘பசங்க’ , ’வம்சம்’ , ‘மெரினா’ படங்களைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கி வரும் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் இசை வெளியீடு நாளை நடைபெற இருக்கிறது.

யுவன்ஷங்கர் ராஜா – பாண்டிராஜ் முதன்  முறையாக இணையும் படம் என்பதால் இசை ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு ஒரு எதிர்பாரப்பு ஏற்பட்டுள்ளது.

சிவ கார்த்திகேயன், விமல், பிந்து மாதவி, ரெஜினா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ், பசங்க புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஸ்டுடியோ க்ரீன் இப்படத்தை வெளியிட இருக்கிறது-

இசை வெளியீட்டு விழா நாளை காலை 9 மணிக்கு சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற உள்ளது.

Read Previous

அஜித் படத்தில் பவர் ஸ்டார் ?

Read Next

பாலாவின் ‘பரதேசி’ அடுத்த வாரம் ரிலீஸ்…