சூப்பர் ஸ்டாரின் ‘கோச்சடையான்’ இசை வெளியீடு விரைவில்…

kochadaiyanசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் அனிமேஷன் படமான ‘கோச்சடையான்’ படத்தின் இசை வெளியீடு விரைவில் நடைபெற உள்ளது.

இது பற்றிய தகவலை படத்தின் இயக்குனரான சௌந்தர்யா அஸ்வின் தெரிவித்துள்ளார்.

தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருவதாகவும், அடுத்த மாதம் முதல் டப்பிங் நடக்கப் போவதாகவும், விரைவில் இசை வெளியீடு பற்றிய தகவலை சொல்கிறேன் என்றும் சௌந்தர்யா தெரிவித்துள்ளார்.

‘எந்திரன்’ படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் நடித்து இன்னும் எந்த படமும் வெளிவராத நிலையில் இப்போது ‘கோச்சடையான்’ பற்றிய தகவல் அவருடைய ரசிகர்களுக்கு நிஜமாகவே உற்சாகமான செய்திதான்.

Read Previous

‘துப்பாக்கி’ இன்று 100வது நாள்

Read Next

டாக்டர் பென்னி – கவுண்டமணி ரீ என்ட்ரி…

Most Popular