டாக்டர் பென்னி – கவுண்டமணி ரீ என்ட்ரி…

gowndamaniஎத்தனை பேர் வந்தாலும் நம்ம கவுண்டரை அடிச்சிக்க முடியுமான்னு ‘கவுன்டர்’ டயலாக் அடிக்கிற எல்லாருமே சொல்வாங்க…

அப்படி பேச்சுக்கு எதிர் பேச்சு பேசறதுக்கு தமிழ் சினிமாவுல கவுண்டமணியை மிஞ்ச யாருமே கிடையாது.

நீ….ண்ட இடைவெளிக்குப் பிறகு செந்தில் குமார் இயக்கிற ‘வாய்மை’ படத்துல டாக்டர் பென்னியா நடிக்கிறாரு கவுண்டமணி. இந்த படத்துல கவுண்டமணிய நடிக்க வச்சதப் பத்தி செந்தில் குமார் என்ன சொல்றாரு பார்ப்போமா…

”கவுண்டமணி சினிமாவை விட்டு ஒதுங்கிட்டாரு, உன் படத்துலலாம் நடிக்க மாட்டாருன்னு சொன்னாங்க. நான் என் படத்தோட கதைய சொல்லி இந்த படத்துல நீங்க இருந்தால் நல்லா இருக்கும்னு சொன்னேன். மொத்தமா கால்ஷீட் வேணும்னு சொன்னப்ப கொஞ்சம் யோசிச்சார்.

ஷுட்டிங் நடுவுல ஒண்ணு, ரெண்டு நாள் வேணா  ரிலீப் தர்றேன் சார்னு சொன்னேன். இந்தக் கதைல நான்தானே ரிலீப், அப்புறம் எனக்கு எப்படி ரிலீப் தருவன்னு சொல்லிட்டு, படத்துல நடிக்க  சம்மதிச்சாரு.

படத்துல கவுண்டர் உலகப் புகழ்பெற்ற இதய சிகிச்சை நிபுணர். அவர் பேரு டாக்டர் பென்னி. முல்லைப் பெரியாறு அணை கட்டுன பென்னி குயிக் மேல இருக்கிற மரியாதைல பேரை அப்படி வச்சிருப்பாரு,” என கவுண்டமணியின் ரீ என்ட்ரியைப் பற்றி மகிழ்கிறார் இயக்குனர் செந்தில்குமார்.

வாங்க கவுண்டரே, உங்க காமெடிய அணை போட்டு தடுக்காம அவுத்து விடுங்க அவுத்து….

Read Previous

சூப்பர் ஸ்டாரின் ‘கோச்சடையான்’ இசை வெளியீடு விரைவில்…

Read Next

விஜய், அஜித் படங்களை பாலா இயக்குவாரா ?