‘துப்பாக்கி’ இன்று 100வது நாள்

thuppakki-100th-dayகலைப்புலி எஸ்.தாணு வழங்க வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் விஜய்,  காஜல் அகர்வால், ஜெயராம் மற்றும் பலர் நடித்த ‘துப்பாக்கி’ படம் இன்று 100வது நாளைக் கொண்டாடுகிறது.

2012ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதியன்று ‘துப்பாக்கி’ வெளியானது.

ஏ.ஆர். முருகதாஸ் , விஜய் கூட்டணியில் வெளிவந்த முதல் படம், உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்று ஏறக்குறைய 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பாளர் தாணுவே சமீபத்திய விழா ஒன்றில் தெரிவித்தார்.

ஆக்ஷன் படங்களை அடுத்த கட்டத்திற்கு இந்த படம் கொண்டு சென்றிருப்பதாக விமர்சகர்களும் கருதுகிறார்கள். விஜய்க்கு அவருடைய திரையுலக வாழ்க்கையில் நல்ல திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்த படம்.

மீண்டும் இந்த வெற்றிக் கூட்டணி எப்போது இணையும் என்ற ஆவலில் உள்ளார்கள் ரசிகர்கள்…

Read Previous

ஷாரூக்குடன் ஆட்டம் போடும் பிரியாமணி

Read Next

சூப்பர் ஸ்டாரின் ‘கோச்சடையான்’ இசை வெளியீடு விரைவில்…