ஷாரூக்குடன் ஆட்டம் போடும் பிரியாமணி

priyamaniலைப்பைப் பார்த்து ஏதும் தப்பா நினைச்சிட்டீங்கன்னா அதுக்கு கம்பெனி பொறுப்பில்லை.

ஏன்னா, இந்த ஆட்டம் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்துக்காக. ரோகித் ஷெட்டி இயக்கத்தில் ஷாரூக்கான்,  தீபிகா படுகோனே நடிக்கும் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடப் போகிறார் பிரியா மணி.

இந்த பாடலின் படப்பிடிப்பு இன்று புனே அருகில் ‘வாய்’ என்ற இடத்தில் நடக்க உள்ளது.

ஷாரூக்குடன் நடனமாட உள்ளதால் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறார் பிரியாமணி.

இந்த பாடலுக்கு முதலில் நடனமாட நயன்தாராவைக் கேட்டதாகவும், அவர் மறுத்ததாகவும் செய்திகள் வந்தன. பிரியாமணியும் முதலில் யோசித்து அப்புறம் சம்மதிதாகவும் தெரிகிறது.

அப்படியே தமிழ்நாடு பக்கமாவும் வந்துட்டுப் போங்க பிரியாமணி, இங்கயும் பாசக்காரப் பயலுங்க நிறைய பேர் இருக்காங்க….

Read Previous

குடித்து, கூத்தடிக்க வேண்டுமா ? பாரதிராஜாவுக்கு இளையராஜா பதில்

Read Next

‘துப்பாக்கி’ இன்று 100வது நாள்

Most Popular