பிரியாமணி, அனுஷ்கா இருவரும் திரைப்படங்களில் கிளாமராக நடிக்கிறார்கள் என ஆந்திராவில் ஒருவர் வழக்கு தொடர்ந்து கடந்த சில நாட்களகா பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இது குறித்து பிரியாமணி கருத்து தெரிவித்துள்ளார்.
“சாண்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நான் புடவையில்தான் இருந்தேன். நான் ‘பிகினி’ உடையில் இருந்திருந்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தால் அது நியாயமானது.
என் மீது வழக்கு தொடர்ந்தவர் நான் ‘சாண்டி’ படத்தில் ஆபாசமாக உடையணிந்ததற்கு ஆதாரத்தைக் காட்டுவாரா ?. வேண்டுமென்றே பப்ளிசிட்டிக்காக தொடுக்கப்பட்ட வழக்கு இது.
நான் நீண்ட காலமாக தெலுங்கப் படங்களில் நடித்து வருகிறேன். எதை கண்ணியமற்ற உடை என அவர் கூறுகிறார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
சில பாடல்களுக்கு மட்டும் சில சமயங்களில் கொஞ்சம் கிளாமராக உடை அணிய வேண்டியிருக்கிறது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன், ” என்று நியாயமாகக் கேட்கிறார் பிரியாமணி.