ரஜினிக்குப் போட்டியாக சல்மான் கான்

ek-tha-tigerலைப்பைப் பார்த்ததும் இங்கு போட்டி போட வருகிறார் என ரஜினி ரசிகர்கள் நினைத்து விட வேண்டாம். இந்த போட்டி நடக்கப் போவது ஜப்பான்  நாட்டில்.

இதுவரை ரஜினிகாந்த் நடித்த இந்திய படங்களையே பார்த்து வந்த ஜப்பான் ரசிகர்கள் இனி சல்மான் கான் நடித்த படத்தையும் பார்க்கப் போகிறார்கள்.

ஹிந்தியில் சல்மான் கான், காத்ரீனா கைப் நடித்து  100 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூல் செய்த படம் ‘ஏக் தா டைகர்.

இந்த படத்தை ஜப்பான் மொழியில் மொழி மாற்றம் செய்து வெளியிட இருக்கிறார்கள்.

ரஜினிகாந்த் மட்டுமே ஆசிய அளவில் மிகவும் புகழ் பெற்ற, வசூல் சக்கரவர்த்தியாக அதிலும் குறிப்பாக ஜப்பான் நாட்டில் விளங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்ப்போம், ஜப்பான் ரசிகர்கள் சல்மான் கானுக்கும் வெற்றியைத் தருவார்களா என்று ?

Read Previous

கிளாமராக நடிக்கிறேனா ? – பிரியாமணி கேள்வி

Read Next

தெலுங்கு படம் இயக்கும் டி. ராஜேந்தர்

Most Popular