தெலுங்கு படம் இயக்கும் டி. ராஜேந்தர்

t-rajendarமிழில் நீண்ட காலமாக படம் எதையும் இயக்காத டி. ராஜேந்தர்  இப்போது தெலுங்குப் படம் ஒன்றை விரைவில் இயக்கப் போகிறார்.

‘பிரேமதாசு’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் டி. ராஜேந்தர் இயக்கி நாயகனாகவும் நடிக்கிறார்.

புதுமுகம் நிகரிகா நாயகியாக நடிக்கிறார். வரும் 18ம் தேதி முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. கோதாவரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

80களில் தெலுங்கிலும் வெற்றிக் கொடி நாட்டியவர் டி. ராஜேந்தர். அவர் இயக்கிய ‘பிரேம சாகரம்’, ‘மைதிலி நா பிரேயசி’ ஆகிய படங்கள் அங்கு பெரும் வெற்றி பெற்றவை.

இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கு படம் இயக்குகிறார்.

தமிழில் அவர் இயக்குவதாக இருந்த ‘ஒருதலைக் காதல்’ படம் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. ஒரு வேளை இந்த படம்தான் தெலுங்காக மாறி விட்டதா ? அல்லது இரு மொழிகளிலும் எடுக்கப் போகிறாரா என்பதைப் பற்றி டி.ஆரே சொன்னால்தான் உண்டு.

Read Previous

ரஜினிக்குப் போட்டியாக சல்மான் கான்

Read Next

என் பெயரை இழுக்க வேண்டாம் – மகிழ் திருமேனி