என் பெயரை இழுக்க வேண்டாம் – மகிழ் திருமேனி

magizh-thirumeniபுதுமுகங்கள் நடித்த ‘முன்தினம் பார்த்தேனே’ , அருண் விஜய் நடித்த ‘தடையற தாக்க’ படங்களை இயக்கியவர் மகிழ் திருமேனி.

இவர் ஆர்யா நடிக்கப் போகும்  படத்தை அடுத்து இயக்கப் போவதாக கடந்த சில நாட்களாக செய்தி பரவி இருந்தது.

இதைப் பற்றி ஆர்யாவும் ஒரு பத்திரிகையில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதத்தில் இயக்குனர் மகிழ் திருமேனி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், “என் அடுத்த படத்துக்கான  ஹீரோவின் பெயரை நான் அறிவித்திதிருப்பதாக வந்திருக்கும் செய்திகளைப் பார்க்க வேடிக்கையாக இருக்கிறது.

என் அடுத்த படத்துக்கான ஹீரோவைக் குறித்து நான் எந்த பத்திரிகையாளரிடத்திலும் எந்த கருத்தையும் இதுவரை கூறவில்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்படியாக வந்த தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. மேற்கண்ட வதந்தியைப் பார்த்து அவசரப்பட்டு கருத்து கூறியவர்கள் அனைவரையும் தயவு செய்து என் பெயரை இனி மேலும் இழுக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

என்னை போலவே அவர்களுக்கும் வேறு எவ்வளவோ முக்கியமான பணிகள் இருக்கும் என நம்புகிறேன்.

என் அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறேன்.

எனது அடுத்த படத்துக்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்,” என தெரிவித்துள்ளார்.

Read Previous

தெலுங்கு படம் இயக்கும் டி. ராஜேந்தர்

Read Next

பதவி – விமர்சனம்