சேரன் இயக்கம் நடிப்பில் 2004ம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட்டான படம் ‘ஆட்டோகிராஃப்’.
சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா நடிக்க பரத்வாஜ் இசைமைத்த படம். ஒருவனது வாழ்க்கையில் போகும் சில பெண்களைப் பற்றிய கதையை அருமையான திரைக்கதையுடனும் காட்சிகளுடனும் கொடுத்து ரசிக்க வைத்தார் சேரன்.
இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க அவர் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
சேரன் இப்போது ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ என்ற படத்தை சத்தமில்லாமல் எடுத்து முடிக்கும் நிலையில் உள்ளார்.
ஆட்டோகிராஃப் 2 சம்பந்தமாக முதல் பாகத்தில் நடித்த சில நடிகைகளுடனும் அவர் பேசியுள்ளதாகத் தெரிகிறது. அவர்களும் இரண்டாம் பாகத்தில் தொடர்புடைய காட்சிகளில் இடம் பெறலாம்.
இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.