‘கேப்டன்’ விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியனும் விரைவில் நாயகனாக அறிமுகமாக உள்ளார்.
சினிமா, அரசியல் இவை இரண்டிலும் வாரிசு என்பது தவிர்க்க முடியாதது. சமீப காலமா இரண்டிலுமே வாரிசுகள் கொடி கட்டிப் பறக்கிறார்கள்.
அந்த வரிசையில் சண்முகபாண்டியன் இப்போது பல பயிற்சிகளையும் பெற்று வருகிறாராம். நடனம், சண்டை, குதிரை ஏற்றம் இப்படி சினிமாவிற்குத் தேவையான சகல பயிற்சிகளையும் கடுமையாக எடுத்து வருகிறாராம்.
அவர் நடிப்பதற்குத் தயாராக மூன்று கதைகளையும் செய்து விட்டிருக்கிறார்கள். எந்த கதையில் முதலில் நடிப்பது என்பதை அனைவரும் யோசித்து முடிவுக்கு வருவார்கள் எனத் தெரிகிறது.
அதில், கண்டிப்பாக தீவிரவாதிகளை எதிர்க்கும் ஒரு ஹீரோவின் கதை மட்டும் நிச்சயம் இருக்காது என நம்புவோம்.