வேகமாக வளரும் ‘பட்டத்து யானை’

pattathu-yaanai

குளோபல் இன்ஃபோடெய்ன்மென்ட் மைக்கேல் ராயப்பன் தயாரிக்க பூபதி பாண்டியன் இயக்கத்தில் தமன் இசையமைப்பில் விஷால், ஐஸ்வர்யா அர்ஜுன், சந்தானம் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பட்டத்து யானை’.

‘மலைக்கோட்டை’ படத்திற்குப் பிறகு விஷால், பூபதி பாண்டியன் இணையும் படம் இது.

இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. சில பாடல்களும், ஒரு சில காட்சிகளும் மட்டுமே படமாக்கப் பட வேண்டியிருக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குனர் பூபதி பாண்டியன் பேசும் போது, “ விஷாலுக்கு அவருடைய திரை வாழ்க்கையின் பரப்பை இந்த படம் இன்னும் அதிகரிக்க வைக்கும்.

நடிகர் அர்ஜுனின் மகளை இந்த படத்தில் அறிமுகப்படுத்துவது மகிழ்ச்சி, பெருமை. எளிதில் புரிந்து கொண்டு நடிக்கிறார். புரியாத காட்சிகளை நடித்துக் காட்ட சொல்லி பிறகு சரியாக செய்து விடுவார். அவருடைய குடும்பத்தில் மூன்றாவது தலைமுறையாக நடிக்க வந்திருப்பவர் இவர். இந்த படம் இவருக்கு  நல்ல அறிமுகமாக அமையும்.

சந்தானம் இன்னொரு பரிமாணம் காட்டும் வகையில் இந்த படம் இருக்கும்.

மயில்சாமி ஜாக்பாட் என்ற திருடனாக வருகிறார். கதை நகர சாவி கொடுப்பதே இவரது கதாபாத்திரம்தான்.

இத்தனை நட்சத்திரங்கள் இடம் பெற்றாலும் படம் முழுக்க ஆக்கிரமித்து ஒரு பாத்திரம் போல பேசப்படும் வகையில் படத்தின் திரைக்கதை இருக்கும்”என்கிறார் இயக்குனர் பூபதி பாண்டியன்.

Read Previous

விஜய், அஜித் என் இரு கண்கள் மாதிரி… – இயக்குனர் எழில்

Read Next

29ம் தேதி ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ ரிலீஸ்

Most Popular