நடிகை அஞ்சலி காணாமல் போன 5 நாட்கள் கழித்து திரும்பி வந்து ஹைதரபாத் போலீசிடம் ஆஜரானார். (படிக்க முந்தைய செய்தி…)
அஞ்சலி ஆஜரான போது அவருடன் தெலுங்கு தயாரிப்பாளர் சுரேஷ் கொன்டேட்டி உடனிருந்தார்.
மீடியாவிடம் ஒரு சில வார்த்தைகள் பேசி முடித்ததும் அங்கிருந்து தயாரிப்பாளர் சுரேஷ் கொன்டேட்டியுடன் சென்றார்.
சில நாட்களுக்கு முன் இவர்தான் அஞ்சலிக்கு ஆதரவாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. அஞ்சலிக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் அவருக்கு தெலுங்கு திரையுலகம் ஆதரவாக இருந்து சத்தமில்லாமல் பிரச்சனையை முடித்து வைக்கும் என்று கூறியிருந்தார்.
இதனிடையே படப்பிடிப்பில் வந்து கலந்து கொள்ளவில்லை என்றால் அவரை படத்திலிருந்து நீக்குவதாகவும் இதே தயாரிப்பாளர் சொன்னதாகவும் தெலுங்கு திரையுலகில் ஒரு தகவல் பரவியது.
இப்படிப்பட்ட சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாமென்றுதான் அஞ்சலியும் காவல் துறை முன் ஆஜரானார் எனத் தெரிகிறது….